பாதி விலைக்கு நகை - மோசடியில் ஈடுபட்ட இருவர் கைது...

பாதி விலைக்கு நகை வாங்கித் தருவதாக பண மோசடியில் ஈடுபட்ட டெல்லியைச் சேர்ந்த வெங்கட்ராகவன் மற்றும் ஒரு பெண்ணை சென்னை போலீசார் கைது செய்துள்ளனர்.
x
டெல்லியைச் சேர்ந்த வெங்கட்ராகவன் என்பவர், சென்னை சின்னமலையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் , ஜாதகம் பார்ப்பதாக கூறி தங்கியுள்ளார். அவரிடம் சிட்லபாக்கத்தைச் சேர்ந்த ராஜலட்சுமி என்பவர் ஜாதகம் பார்க்கச் சென்றுள்ளார். அப்போது, பாதி விலைக்கு நகைகள் வாங்கித் தருவதாக கூறிய வெங்கட்ராகவன், ராஜலட்சுமி கொடுத்த 2 லட்சம் ரூபாய்க்கு 5 லட்சம் ரூபாய்க்கான நகைகள் கொடுத்ததாக கூறப்படுகிறது. இதேபோல், நகைகள் வாங்கித் தருவதாக ராஜலட்சுமி மூலம் வலை விரித்த வெங்கட்ராகவன், பலரிடமும் லட்சக் கணக்கான ரூபாய் வசூல் செய்துள்ளார். அதாவது, குறைந்த விலைக்கு நகைவாங்க ஆசைபடும் நபர்கள், பிரபல நகைக் கடையின் பெயரில் பணத்தை செலுத்தி விடுவார்கள். அதற்கான ஆதாரத்தை வாட்ஸ்ஆப் மூலம் பெறும் இந்த மோசடி கும்பல், குறிப்பிட்ட நகைக் கடையின் பெயரில் பணம் செலுத்தியதாக கூறி, நகைகளை பெற்றுவிடும். ஆனால், பணத்துடன்  தப்பிய அந்த கும்பல் மொபைல் எண்களை மாற்றிவிட்டது. இந்த மோசடி பற்றி தகவல் அறிந்த பிரபல நகைக்கடை மேலாளர், வெங்கட்ராகவனை தொடர்பு கொண்டு, தமக்கு நகை வேண்டும் என கேட்டுள்ளார். அவர் கொடுத்த வங்கிக் கணக்கில் 8 லட்சம் ரூபாய் பணம் கொடுத்து கடைக்கு வருமாறு அழைத்துள்ளனர். கடைக்கு வந்த பெண் ராஜலட்சுமியை கையும் களவுமாக பிடித்த அவர்கள், போலீசார் மூலம் வெங்கட்ராகவனையும் கைது செய்தனர். இந்த மோசடிகள் குறித்து மேலும் விசாரிக்கப்பட்டு வருகிறது.

Next Story

மேலும் செய்திகள்