சென்னையில் வாகன சோதனை - பணப்பையை வீசி சென்ற மர்ம நபர்கள் : ஒன்றரை கோடி ரூபாய் பணம் பறிமுதல்

சென்னை கோட்டூர்புரம் போலீசார் நேற்று இரவு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது சந்தேகத்திற்கு இடமாக வந்த இரு சக்கர வாகனத்தை சோதனை செய்ய முற்பட்டுள்ளனர்.
சென்னையில் வாகன சோதனை - பணப்பையை வீசி சென்ற மர்ம நபர்கள் : ஒன்றரை கோடி ரூபாய் பணம் பறிமுதல்
x
சென்னை கோட்டூர்புரம் போலீசார் நேற்று இரவு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது சந்தேகத்திற்கு இடமாக வந்த இரு சக்கர வாகனத்தை சோதனை செய்ய முற்பட்டுள்ளனர். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு மர்ம நபர்கள், தாங்கள் வைத்திருந்த ஒரு பையை தூக்கி வீசிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினர். போலீசார் அவர்கள் வீசிச்சென்ற பையை சோதனை செய்த போது, அதில் ஒரு கோடியே 56 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் பணம் கட்டு கட்டாக இருப்பது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்த போலீசார் மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.  

Next Story

மேலும் செய்திகள்