கல்விக் கட்டணம் தொடர்பான அரசாணை... திருத்தம் செய்யப்பட்டதை ரத்து செய்து உத்தரவு
அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான கட்டணமே, உதவித் தொகையாக வழங்கப்படும் என்ற அரசாணையை, சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்து, உத்தரவிட்டுள்ளது.
அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான கட்டணமே, உதவித் தொகையாக வழங்கப்படும் என்ற அரசாணையை, சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்து, உத்தரவிட்டுள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் படிக்கும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு கல்வி கட்டணத்தை அரசே செலுத்தும் திட்டம், 2012ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. பின்னர், 2017 -18ஆம் கல்வியாண்டு முதல் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான கட்டணமே, நிர்வாக ஒதுக்கீட்டில் பயிலும் மாணவர்களுக்கும் உதவித் தொகையாக வழங்கப்படும் என ஆகஸ்ட் 2017-ல் அரசாணை திருத்தம் செய்யப்பட்டது. இதை ரத்து செய்யக் கோரியும், அரசு நிர்ணயித்துள்ள 85 ஆயிரம் ரூபாய் கட்டணத்தை தங்களுக்கு உதவி தொகையாக வழங்க உத்தரவிடக் கோரியும், 114 மாணவிகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
Next Story