திருப்பூரில் திமுக பேனர் கிழிக்கப்பட்டதால் பரபரப்பு
திருப்பூரில், தேர்தல் வெற்றிக்கு நன்றி தெரிவித்து வைக்கப்பட்ட பேனரில், பெயர் போடாத காரணத்தால் திமுகவினரே அந்த பேனரை கிழித்தெறிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பூரில், தேர்தல் வெற்றிக்கு நன்றி தெரிவித்து வைக்கப்பட்ட பேனரில், பெயர் போடாத காரணத்தால் திமுகவினரே அந்த பேனரை கிழித்தெறிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருப்பூர் தொகுதி நாடாளுமன்ற தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் சுப்பராயன் வெற்றி பெற்றார். இதையடுத்து, நகரின் பல்வேறு பகுதிகளிலும், நன்றி தெரிவித்து திமுக மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பேனர் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், செல்லாண்டியம்மன் கோயில் பகுதியில் திமுக சார்பில் வைக்கப்பட்ட ஒரு பேனரில், 44ஆவது வார்டு பகுதியை சேர்ந்த முன்னாள் கவுன்சிலரின் பெயர் இடம்பெறவில்லை என தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த அவர், அந்த பேனரை கிழித்தெறிந்துள்ளார். தகவல் அறிந்து வந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் , உடனடியாக அந்த பேனரை அகற்றி விட்டு, அந்த இடத்தில் சிறிய அளவிலான பேனர் ஒன்றை வைத்து சென்றனர்.
Next Story