குன்னூர் சிம்ஸ் பூங்கா பழ கண்காட்சி : சுற்றுலா பயணிகளை கவர புதிய ஏற்பாடுகள்
குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 61 வது பழ கண்காட்சி இன்று தொடங்குகிறது.
குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 61 வது பழ கண்காட்சி இன்று தொடங்குகிறது. நீலகிரி மாவட்டம் குன்னூரில் சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக ஆண்டுதோறும் சிம்ஸ் பூங்காவில் பழ கண்காட்சி நடத்தப்படுகிறது.
இதனையொட்டி பூங்காவின் நுழைவு வாயிலில் ஒன்னறை டன் ஆரஞ்சு, திராட்சை பழங்களை கொண்டு வண்ணத்து பூச்சி, மாட்டு வண்டி, மயில் ஆகிய உருவங்கள் உருவாக்கப்பட்டு உள்ளன. கண்காட்சியில் நீலகிரி, கிருஷ்ணகிரி, விழுப்புரம், தேனி உள்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த தோட்டக் கலைத் துறையினர் பங்கேற்க உள்ளனர். கண்காட்சியில் பழங்கள் சேதப்படுத்துவதை குறைக்க இம்முறை நூலில் பழங்களை கட்டி அலங்கரிக்க கண்காட்சி ஏற்பாட்டாளர்கள் முடிவு செய்துள்ளனர்.
Next Story