"அரசுக்கு ஏற்பட்ட ஆபத்து நீங்கியது" : இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி

இடைத்தேர்தல் வெற்றி மூலம் தமிழகத்தில் அதிமுக அரசுக்கு ஏற்பட்ட ஆபத்து நீங்கியது.
அரசுக்கு ஏற்பட்ட ஆபத்து நீங்கியது : இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி
x
234 எம்.எல்.ஏ.க்களை கொண்ட தமிழக சட்டப்பேரவையில், தற்போது அதிமுகவுக்கு சபாநாயகரை சேர்த்து 111 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு உள்ளது.  இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தனியரசு, தமிமுன் அன்சாரி, கருணாஸ் ஆகியோரை சேர்த்தால் அதிமுகவின் பலம் 114 ஆகும். இந்த 3 பேரில் தனியரசு தவிர மற்ற 2 பேரும் அ.தி.மு.க. எதிர்ப்பு நிலையில் இருப்பதாக தெரிகிறது. இதுபோல, அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ரத்தினசபாபதி , பிரபு, கலைச்செல்வன் ஆகிய 3 பேரும் தினகரன் ஆதரவாளர்களாக கருதப்படுகிறது. இதனால், அதிமுகவின் பலம் 109ஆக குறைகிறது. இந்நிலையில், இடைத்தேர்தலில் 9 இடங்களில் வெற்றி பெறுவதால் அதிமுகவின் பலம் 118ஆக உயரும். இது தனிப்பெரும்பான்மைக்கு போதுமானது என்பதால் தமிழகத்தில் அதிமுக அரசுக்கு ஆபத்து இல்லை

Next Story

மேலும் செய்திகள்