மக்கள் தலைவராக உயர்ந்தார் மு.க.ஸ்டாலின் : ஓர் அலசல்

மக்களவை மற்றும் இடைத்தேர்தலில் திமுகவுக்கு கிடைத்த பெரும் வெற்றியின் மூலம் மு.க. ஸ்டாலின், தமிழகத்தின் மக்கள் தலைவராக உயர்ந்துள்ளார்.
மக்கள் தலைவராக உயர்ந்தார் மு.க.ஸ்டாலின் : ஓர் அலசல்
x
மக்களவை மற்றும் இடைத்தேர்தலில் திமுகவுக்கு கிடைத்த பெரும் வெற்றியின் மூலம் மு.க. ஸ்டாலின், தமிழகத்தின்  மக்கள் தலைவராக உயர்ந்துள்ளார். அர்ப்பணிப்பு உணர்வுடன் கடினமாக உழைத்தால், மக்கள் மனதில் நிச்சயம் இடம் பிடிக்க முடியும் என்பதை நிரூபித்து, தமிழக அரசியலிலும் தேசிய அரசியலிலும் மு.க. ஸ்டாலின் முக்கிய இடத்தை பிடித்துள்ளார். மக்களவை தேர்தலிலும், சட்டப்பேரவை இடைத்தேர்தலிலும் திமுக, பெரும் வெற்றி பெற்றுள்ளது. திமுக தலைவர் பதவியை ஏற்றபின் சந்தித்த முதல் தேர்தலில் கிடைத்துள்ள இந்த வெற்றியின் மூலம், தமிழகத்திலும், தேசிய அரசியலிலும் அசைக்க முடியாத - தவிர்க்க முடியாத ஒரு சக்தியாக மு.க. ஸ்டாலின் உயர்ந்துள்ளார். 1953 - ம் ஆண்டு மார்ச் 1 - ல் பிறந்த மு.க.ஸ்டாலின், வட்ட பிரதிநிதி - மாவட்ட பிரதிநிதி - பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர் - என தீவிர களப்பணிகள் மூலம் திமுகவில் படிப்படியாக உயர்ந்தார். பள்ளி பருவத்திலேயே அரசியலில் குதித்த மு.க. ஸ்டாலின், 1975 - ல் ஓராண்டு "மிசா" கொடுமையையும் எதிர்கொண்டார்.  எம்.எல்.ஏ. அமைச்சர் - துணை முதல்வர் என பல பதவி களை வகித்த, மு.க. ஸ்டாலின், குறிப்பாக, மக்களால் நேரடியாக தேர்வு செய்யப்பட்ட முதல் மேயர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர். திமுகவில், இளைஞர் அணி மாநில செயலாளர் - துணை பொதுச் செயலாளர் - பொருளாளர் - செயல் தலைவர் என படிப்படியாக உயர்ந்த மு.க. ஸ்டாலின், 70 ஆண்டு வரலாறு படைத்த அக்கட்சியின் தலைவராக கடந்தாண்டு ஆகஸ்ட் 28 - ம் தேதி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டு, பொறுப் பேற்றார். அதிமுகவின் சக்தி மிக்க தலைவராக வலம் வந்த ஜெய லலிதா மறைவுக்குப்பின் தமிழகத்தில் நிகழ்ந்த பல்வேறு அரசியல் மாற்றங்களின்போது. மு.க. ஸ்டாலினின் தலைமை குறித்து, பல்வேறு விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டன. தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் - நமக்கு நாமே நடைபயணம் - திண்ணை பிரசாரம் என தீவிர களப்பணி - மக்களுடன் நேரடி சந்திப்பு என பல்வேறு வியூகங்கள் மூலம் மு.க. ஸ்டாலின், தன் தலைமையை நிரூபித்து, தம் மீதான விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார். ஜெயலலிதா - கருணாநிதி, மறைவால் ஏற்பட்ட வெற்றிடத் தை நிரப்பும் வகையில், இந்த மாபெரும் வெற்றியின் மூலம், தமிழகத்தின் தவிர்க்க முடியாத சக்தியாக மு.க. ஸ்டாலின் பார்க்கப்படுகிறார். மற்றொருபக்கம், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, ஆட்சிக்கு தேவையான தொகுதிகளை தக்க வைத்து, அதிமுக- வில்  ஒரு வலுவான தலைவராக உயர்ந்து நிற்கிறார். 


Next Story

மேலும் செய்திகள்