"வெற்றியை காண கருணாநிதி இல்லையே" - ஸ்டாலின்
மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத் தேர்தலில் பெரும்பாலான இடங்களில் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்ற நிலையில், மாலை கோபாலபுரத்தில் உள்ள இல்லத்தில், தயாளு அம்மாளை சந்தித்து, தி.மு.க. தலைவர் ஸ்டாலின் ஆசி பெற்றார்.
மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத் தேர்தலில் பெரும்பாலான இடங்களில் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்ற நிலையில், மாலை கோபாலபுரத்தில் உள்ள இல்லத்தில், தயாளு அம்மாளை சந்தித்து, தி.மு.க. தலைவர் ஸ்டாலின் ஆசி பெற்றார். இதற்காக கோபாலபுரம் இல்லத்திற்கு வந்த ஸ்டாலினை, தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் உற்சாகமாக வரவேற்றனர். இதனைத் தொடர்ந்து அண்ணா அறிவாலயம் சென்ற தி.மு.க. தலைவர் ஸ்டாலின், அண்ணா மற்றும் கருணாநிதி சிலைகளுக்கு மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து அங்கு கூடியிருந்த கட்சி தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் இடையே பேசும் போது, இந்த வெற்றியை காண கருணாநிதி இல்லையே என்று கூறினார். இந்த வெற்றியை பெற உதவிய தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்களுக்கு ஸ்டாலின் நன்றி தெரிவித்தார்.
கருணாநிதி சமாதியில் ஸ்டாலின் மரியாதை :
சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. தொண்டர்கள் இடையே வெற்றி உரையாற்றிய பின்னர், முக்கிய நிர்வாகிகளுடன், கருணாநிதி சமாதிக்கு சென்ற தி.மு.க. தலைவர் ஸ்டாலின், வெற்றியை சமர்ப்பித்து மரியாதை செலுத்தினார். தேர்தல் பிரசாரம் தொடங்கும் முன் திட்டமிட்டபடி இதனை மேற்கொள்வதாக, தொண்டர்களிடையே பேசும் போது ஸ்டாலின் கூறியது குறிப்பிடத்தக்கது.
Next Story