"இளைஞர்கள் பீட்சா, பர்கர் தவிர்க்க வேண்டும்" - வெங்கையா நாயுடு

இளைஞர்கள் பீட்சா, பர்கர் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் என குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு கூறினார்.
இளைஞர்கள் பீட்சா, பர்கர் தவிர்க்க வேண்டும் - வெங்கையா நாயுடு
x
மத்திய சுற்றுச்சூழல் வனத்துறை மற்றும் தமிழக அரசு இணைந்து நடத்திய சர்வதேச பல்லுயிர் பெருக்க தின விழா சென்னையில் நடைபெற்றது. அதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு பேசுகையில், கலாச்சாரத்தையும், இயற்கையையும் ஒவ்வொருவரும் நேசிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். சென்னை மழை வெள்ளத்தின் பாதிப்பினை சுட்டிக்காட்டிய அவர், நீர் வழித்தடங்களை ஆக்கிரமிப்பு செய்தது தான் பிரச்சினைகளுக்கு காரணம் என்று கூறினார். பீட்சா, பர்கர் போன்ற உணவுகளை தவிர்ப்பதுடன், ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள பாரம்பரிய உணவு வகைகளை இளைஞர்கள் விரும்பி  உண்ண வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

Next Story

மேலும் செய்திகள்