துப்பாக்கிச் சூட்டின் முதலாம் ஆண்டு நினைவுதினம்... அப்பாவி மக்கள் 13 பேர் மாண்டு போன சோகம்
தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்த சம்பவத்தின் முதலாம் ஆண்டு நினைவுதினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்த சம்பவத்தின் முதலாம் ஆண்டு நினைவுதினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இந்த சூழலில், அந்த சம்பவத்தில் உறவுகளை இழந்தவர்கள் ஓராண்டாகியும் மீளா துக்கத்தில் உறைந்துள்ளனர்.
வரலாற்றில் முத்துக்குளிப்புக்கு பெயர் பெற்றது தூத்துக்குடி மாநகர். ஆனால் இன்று தூத்துக்குடி என்றாலே அனைவரின் நினைவுக்கும் வருவது கடந்தாண்டு மே 22ஆம் தேதி நிகழ்ந்த துப்பாக்கிச் சூடு தான். தலை மற்றும் மார்பு பகுதியில் குண்டு துளைத்து 13 பேர் மாண்டு போனர்கள். ஒரு கணம் இதை நினைத்து பார்ப்பதற்கே மனம் பதறுகிறது.
மோசமான இந்த துயரச் சம்பவத்தை நினைப்பதற்கே மனம் பதறுகிறது என்றால், உறவுகளை இழந்த குடும்பத்தினரின் துக்கத்தை வார்த்தைகளால் விவரிக்க இயலாது. இந்த சம்பவம் நடந்து ஓராண்டாகிய நிலையிலும், கூட துக்கத்தில் இருந்து மீளமுடியாமல் பரிதவிக்கிறார்கள் உறவுகளை பறிகோடுத்த 13 பேரின் குடும்பத்தினர்.
Next Story