ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு அனுமதி - 5 ஒன்றியங்களில் விவசாயிகள் போராட்டம்
ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மன்னார்குடி, கோட்டூர், திருத்துறைப்பூண்டி, நீடாமங்கலம், கூத்தாநல்லூர் ஆகிய 5 ஒன்றியங்களில், விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மன்னார்குடி, கோட்டூர், திருத்துறைப்பூண்டி, நீடாமங்கலம், கூத்தாநல்லூர் ஆகிய 5 ஒன்றியங்களில், விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் விழுப்புரம், நாகை, கடலூர், திருவாரூர் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளில் 274 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க வேதாந்தா குழுமத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால் விவசாயம் முற்றிலும் அழிந்து விடும் என கூறி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் தொடர்ந்து திட்டத்தை ரத்து செய்ய கோரி போராடி வருகின்றனர். இன்றைய போராட்டத்தில், மத்திய அரசின் திட்டங்களை மாநில அரசு தடுக்க வேண்டும் என வலியுறுத்தி கோஷம் எழுப்பப்பட்டது.
Next Story