திருவண்ணாமலை : ரூ. 4 லட்சம் மதிப்பிலான ஐம்பொன் சிலை திருட்டு
திருவண்ணாமலை மாவட்டம் தானிப்பாடி அருகே அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் 4 லட்ச ரூபாய் மதிப்புள்ள ஐம்பொன் சிலை திருடப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் தானிப்பாடி அருகே அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் 4 லட்ச ரூபாய் மதிப்புள்ள ஐம்பொன் சிலை திருடப்பட்டுள்ளது. அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் 3 அடி உயரமும், 115 கிலோ எடையும் கொண்ட ஐம்பொன் சிலை, அம்மன் தாலி உள்ளிட்டவைகளை அடையாளம் தெரியாத நபர்கள் கோயிலின் பூட்டை உடைத்து கொள்ளையடித்துள்ளனர். தகவல் அறிந்து வந்த போலீசார் மர்ம நபர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.
Next Story