கெயில் நிறுவனம் எரிவாயு குழாய் பதிப்பு : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்
விளை நிலங்களில் எரிவாயு குழாய் பதிக்கும் செயலுக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
விளை நிலங்களில் எரிவாயு குழாய் பதிக்கும் செயலுக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அக்கட்சி விடுத்துள்ள அறிக்கையில், நாகை மாவட்டம், சீர்காழி வட்டம், மாதானம், மேமாத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விளை நிலங்களில், ராட்சத இயந்திரங்கள் மூலம் எரிவாயு குழாய் பதிக்கும் பணியில் கெயில் நிர்வாகம் ஈடுபட்டுள்ளதற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக கைது செய்யப்பட்ட விவசாயி இரணியன் உள்ளிட்ட 8 பேர் மீது பதியப்பட்டுள்ள வழக்குகளை திரும்பபெற்ற விடுதலை செய்ய வேண்டும் என்று அறிக்கையில் கூறியுள்ளது. மத்திய அரசின் திட்டத்துக்கு எடப்பாடி பழனிசாமி அரசு கண்மூடித்தனமாக ஆதரவளித்து நிறைவேற்ற துடிப்பதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அழிக்கப்பட்ட பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் அதில், கூறப்பட்டுள்ளது.
Next Story