பணப்பட்டுவாடா தொடர்பாக தலைமை தேர்தல் அதிகாரியிடம் புகார் - ஆர். எஸ். பாரதி

இடைத்தேர்தல் நடைபெறும் 4 தொகுதிகளிலும் மின்சாரத்தை நிறுத்தி விட்டு வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்பட்டதாக திமுக புகார் தெரிவித்துள்ளது.
x
இடைத்தேர்தல் நடைபெறும் 4 தொகுதிகளிலும் மின்சாரத்தை நிறுத்தி விட்டு, வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்பட்டதாக திமுக புகார் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூவை சென்னை - தலைமை செயலகத்தில்சந்தித்து, மாநிலங்களவை திமுக உறுப்பினரும் அக்கட்சியின் அமைப்பு செயலாளருமான ஆர். எஸ். பாரதி நேரில் புகார் கொடுத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆர். எஸ். பாரதி, மின் வாகனங்கள் மூலம் சென்று, பணப்பட்டுவாடா செய்யப்பட்டதாக குற்றஞ்சாட்டினார். எனவே, விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு, தேர்தல் ஆணையத்தை கேட்டுக்கொண்டதாக ஆர். எஸ். பாரதி தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்