ரயில் கொள்ளையில் ஈடுபட்டு மலேசியாவில் ஹோட்டல்...வெளிவந்த திடுக்கிடும் தகவல்கள்

நீண்ட நாட்களாக ரயில்களில் கொள்ளையடித்து வந்த ரயில் கொள்ளையனை போலீசார் கைது செய்து விசாரித்தபோது, பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
x
கேரளா மாநிலம் திரிசூர் பகுதியை சேர்ந்த சாகுல் ஹமீது என்கிற ரயில் கொள்ளையனை போலீசார் கைது செய்துள்ளனர். அவனிடம் நடத்திய விசாரணையில், ரயில்களில் முதல்வகுப்பு ஏசி பெட்டியில் பயணம் செய்து பயணிகள் தூங்கும் நேரத்தில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய ரயில்வே டிஜிபி பாலகிருஷ்ணன், அவன் மீது 29 கொள்ளை வழக்குகள் உள்ளதாகக் கூறினார். தமிழ்நாடு - கேரளா செல்லும் ரயில்களில் அதிகமாக திருடியுள்ளதாகவும், அந்த பணத்தைக் கொண்டு 11 நாடுகளுக்கு பயணம் செய்துள்ளதுடன், மலேசியாவில் ஓட்டல் வாங்கி நடத்தி வந்துள்ளதாகவும்  குறிப்பிட்டார். அவனிடமிருந்து 110  சவரன் நகைகளை கைப்பற்றியதுடன், மலேசியாவில் வாங்கியுள்ள சொத்துகளை முடக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும் பாலகிருஷ்ணன் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்