அரசு கல்லுாரிகளில் அதிகரிக்கும் போலி ஆசிரியர்கள் - 11 பேரை சஸ்பெண்ட் செய்து கல்லுாரி கல்வித்துறை உத்தரவு
அரசு கலை அறிவியல் கல்லுாரிகளில் போலி கல்வி சான்றிதழ்களை கொடுத்து ஆசிரியர்கள் வேலையில் சேரும் அவலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது
தமிழகத்தில் 99 அரசு கலை, அறிவியல் கல்லுாரிகளும், 185 அரசு நிதியுதவி பெறும் கல்லுாரிகளும், 600 க்கும் அதிகமான தனியார் கல்லுாரிகளும் இயங்கி வருகின்றன. அரசு கலை, அறிவியல் கல்லுாரிகளில் கடந்த சில ஆண்டுகளாக, போலி ஆசிரியர்கள் ஊடுருவியிருப்பதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன. இதை நிரூபிக்கும் விதமாக, போலி பி.எச்.டி., ஆசிரியர்கள் 11 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள கல்வியாளர்கள், கல்வித்துறையில் போலிகளை அனுமதிக்காமல், தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story