பிரம்மாண்ட கோதண்டராமர் சிலை 5 நாட்களாக நிறுத்தி வைப்பு...
பிரம்மாண்ட கோதண்டராமர் சிலை தென்பெண்ணை ஆற்று பாலம் அமைக்கும் பணிகள் தாமதத்தால் ஓசூர் அருகே சாலையோரத்தில் 5-வது நாளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம், கொரக்கோட்டை கிராமத்தில் மலைகளில் 350 டன் எடை கொண்ட பிரம்மாண்ட கோதண்டராமர் சிலை செதுக்கப்பட்டது. இந்த சிலை, 250 கிலோ மீட்டர் தூரத்தை கடந்து பல இடையூறுகளை தாண்டி ஓசூர் அருகே உள்ள பேரண்டப்பள்ளி பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளது. அங்கு ஆற்றின் குறுக்கே தற்காலிக மண் பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதால், சிலையை கொண்டு செல்ல முடியவில்லை. தொடர்ந்து, 5 நாட்களாக சிலை அங்கேயே நிற்பதால், ஆயிரக்கணக்கான பொதுமக்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
Next Story