நெல்லையில் கணவன் - மனைவிக்கு இடையே தகராறு : மனைவியை வெட்டி கொன்ற கணவன்

நெல்லையில் கணவன் நடத்திய கொலைவெறி தாக்குதலில், மனைவி உயிரிழந்த நிலையில் மகள் உயிருக்கு போராடி வருகிறார்
நெல்லையில் கணவன் - மனைவிக்கு இடையே தகராறு : மனைவியை  வெட்டி கொன்ற கணவன்
x
நெல்லை மாவட்டம் சங்கரன் கோவிலை அடுத்த நெல்கட்டும்செவல் கிராமத்தை சேர்ந்தவர் சமுத்திரப்பாண்டி... வெளிநாட்டில் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்துவந்த இவர், கடந்த மூன்று மாதங்களாக சொந்த கிராமத்தில் தங்கியுள்ளார். அங்கிருந்து வந்த நாள் முதல் கணவன் மனைவிக்கு இடையே அவ்வப்போது பிரச்சினை எழுந்து வந்துள்ளது.இந்த நிலையில், இன்று இருவருக்கும் வாக்குவாதம் முற்றியதில், சமுத்திரபாண்டியன், வீட்டில் இருந்த அரிவாளால் மனைவியை சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் உடனிருந்த அவர்களது மகளுக்கு அரிவாள் வெட்டு விழுந்துள்ளது. மனைவி வெள்ளைதுரைச்சி சம்பவ இடத்திலே உயிரிழக்க, மகள் சிவரஞ்சினியை படுகாயங்களுடன் மீட்ட புளியங்குடி காவல்துறையினர், மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதையடுத்து, சமுத்திரபாண்டியனை கைது செய்த போலீசார், மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்