ஒரு மதத்தை இழிபடுத்தியும் பேசியதற்காக கமல்ஹாசன் வருத்தம் தெரிவித்தால் தமது கருத்தை வாபஸ் பெற தயார் - ராஜேந்திர பாலாஜி
ஒரு மதத்தை இழிபடுத்தியும் பேசியதற்காக கமல்ஹாசன் வருத்தம் தெரிவித்தால் தமது கருத்தையும் வாபஸ் பெறுவதாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
தீவிரவாதத்தை தூண்டும் வகையிலும், ஒரு மதத்தை இழிபடுத்தியும் பேசியதற்காக கமல்ஹாசன் வருத்தம் தெரிவித்தால், தமது கருத்தையும் வாபஸ் பெறுவதாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். தீவிரவாதத்தை தூண்டும் வகையில் ஒரு மதத்தை மட்டும் இழிவுபடுத்தி பேசுவதை ஏற்க முடியாது எனவும், இந்து மதத்தை போல, மற்ற மதத்தை இழிவுபடுத்தி பேச முடியுமா எனவும் கமல்ஹாசனுக்கு கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியை தடை செய்ய வேண்டும் எனவும் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
Next Story