நான் பாஜகவுடன் தொடர்பு வைத்துள்ளேனா? நிரூபித்தால் அரசியலில் இருந்து விலகத்தயார் - ஸ்டாலின்
திமுக வேட்பாளர் சண்முகைய்யாவை ஆதரித்து அக்கட்சித் தலைவர் ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார்.
ஒட்டபிடாரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வல்லநாட்டில் திமுக வேட்பாளர் சண்முகைய்யாவை ஆதரித்து, அக்கட்சித் தலைவர் ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், 8 ஆண்டுகளாக திமுக ஆட்சியில் இல்லாத நிலையில் மக்களுக்காக குரல் கொடுக்கும் பணியை தொடர்ந்து செய்துவருவதாகக் குறிப்பிட்டார்.பாஜகவுடன் தான் தொடர்பு வைத்துள்ளதாக கூறும் தமிழக பாஜக தலைவர் தமிழிசை, அதனை நிரூபித்தால் அரசியலை விட்டே விலகத் தயார் என்றார். இல்லாவிட்டால் அப்படி சொல்பவர்கள் விலகத் தயாரா எனவும் ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.தோல்வி பயம் வந்துவிட்டதால் அதனை திசைதிருப்புவதற்கு இவ்வாறு பேசி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
Next Story