டாஸ்மாக் கடையை மூடக் கோரி போலீஸ் காலில் விழுந்த பெண்கள்
விவசாய நிலத்தில் திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையை மூடக் கோரி இரண்டாவது நாளாக பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே சிறுகளத்தூர் கிராமத்தில் உள்ள விவசாய நிலத்தில் புதிதாக கட்டிடம் கட்டப்பட்டு டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அப்பகுதி பெண்கள் கடையை மூடக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டதால் டாஸ்மாக் கடை தற்காலிகமாக மூடப்பட்டது. இது குறித்து உடையார்பாளையம் கோட்டாட்சியரும் அப்பகுதி பெண்களூம் பேச்சு வார்த்தை நடத்தினர். 3 மாதங்களுக்குள் டாஸ்மாக் கடை மூடப்படும் என கோட்டாட்சியர் கூறியதால் பெண்கள் மீண்டும் டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கே வந்த இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் காலில் விழுந்து பெண்கள் கடையை மூடுமாறு வலியுறுத்தினர்.போலீசார் டாஸ்மாக கடையை மூட நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தை அடுத்து பெண்கள் கலைந்து சென்றனர்.
Next Story