தமிழகத்தில் அடுத்த 3 தினங்கள் வெப்பம் அதிகரிக்கும் - சென்னை வானிலை மையம்
தமிழகத்தில் அடுத்த மூன்று தினங்களுக்கு வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மாநிலத்தின் பல முக்கிய நகரங்களில் கத்திரி வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. வெயில் மக்களை வாட்டி வதைத்து வரும் நிலையில், அடுத்த மூன்று தினங்களுக்கு வெப்பத்தின் தாக்கம் இயல்பைவிட அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஒரு சில இடங்களில் அனல் காற்று வீசும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெப்பசலனம் காரணமாக, ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழையும் எதிர்பார்க்கலாம் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.சென்னையை பொறுத்து வரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Next Story