2023க்குள் குடிசை பகுதி மக்களுக்கு கான்கிரீட் வீடுகள் : துணை முதலமைச்சர் நம்பிக்கை
திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் அதிமுக வேட்பாளர் முனியாண்டியை ஆதரித்து துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் மதுரை வலையங்குளத்தில் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் அதிமுக வேட்பாளர் முனியாண்டியை ஆதரித்து துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் மதுரை வலையங்குளத்தில் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், 2023-ம் ஆண்டுக்குள் தமிழகத்தில் உள்ள அனைத்து குடிசை பகுதி மக்களுக்கும் தரமான கான்கிரீட் வீடுகள் கட்டித்தரப்படும் என்று தெரிவித்தார். 23ஆம் தேதிக்கு மேல் அதிமுக ஆட்சி நீடிக்காது என்று கூறும் ஸ்டாலினால் ஒருபோதும் முதலமைச்சராக முடியாது என்று விமர்சித்தார். முப்பத்திரண்டு காலமாக ஜெயலலிதாவுடன் இருந்து அவரை காப்பாற்றாமல் துரோகம் செய்து அதிமுகவை பிடிக்க வேண்டும் என்று நினைப்பவர்களை அதிமுக தொண்டர்கள் எதிர்ப்பார்கள் என்றும் தெரிவித்தார்.
Next Story