பழனி முருகன் கோவில் வைகாசி விசாக திருவிழா கொடியேற்றம்

பழனி முருகன் கோவில் வைகாசி விசாக திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
பழனி முருகன் கோவில் வைகாசி விசாக திருவிழா கொடியேற்றம்
x
பழனி முருகன் கோவில் வைகாசி விசாக திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி பெரியநாயகி அம்மன் கோவிலில் விநாயகர் பூஜை, புண்ணியாக வாஜனம், கொடிபட பூஜைகள் நடைபெற்றது. 10 நாட்கள் நடைபெறும் வைகாசி விசாகத் திருவிழாவின் ஆறாம் நாளான17-ந்தேதி மாலை முத்துக்குமாராசாமி - வள்ளி, தெய்வானை திருக்கல்யாணமும், 18ம்தேதி தேரோட்டமும் நடைபெறுகிறது. 

காமாட்சியம்மன் கோவில் சித்திரை திருவிழா


நாகை மாவட்டம் சாமந்தான்பேட்டை காமாட்சியம்மன் கோவில் சித்திரை திருவிழாவில், ஏராளமான பக்தர்கள் பால் குடங்களை எடுத்து தங்களது நேர்த்திக்கடன்களை நிறைவேற்றினர்.கடந்த 8ஆம் தேதி காப்பு கட்டுதலுடன் சித்திரை திருவிழா தொடங்கியது. இந்நிலையில் முக்கிய திருவிழாவான அம்மனுக்கு பாலாபிஷேகம் செலுத்தும் நிகழ்ச்சி இன்று விமர்சையாக நடைபெற்றது. பால்குட ஊர்வலத்தின் போது, பக்தர்கள் பக்தி பரவசத்துடன் கோலாட்டமும், கும்மியும் அடித்து நடமாடினர்.விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

நெல்லுக்கடை மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா




நாகையில் உள்ள பிரசித்திப்பெற்ற நெல்லுக்கடை மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது. சித்திரை திருவிழா 3ஆம் தேதி பூச்சொரிதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான காத்தவராய சுவாமி செடில் மரத்தில் ஏறும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் ஆயிரத்திற்கு மேற்பட்டோர் தங்களது குழந்தைகளை செடில் மரத்தில் ஏற்றி நேர்த்திக்கடனை நிறைவேற்றினர். சுமார் 5 ஆயிரத்திற்கும் அதிகமான குழந்தைகள் செடில் மரத்தில் சுற்றப்பட உள்ளதால், நாளை காலை வரை இந்நிகழ்ச்சி தொடர்ந்து நடைபெற உள்ளது. தோராட்டத்தின் போது, பல்வேறு வகையான காவடிகளை எடுத்தும், மக்கள் நேர்த்திக்கடன்களை செலுத்தினர்.

Next Story

மேலும் செய்திகள்