கோடை விடுமுறையையொட்டி கிண்டி சிறுவர் பூங்காவில் குவியும் மக்கள்

கோடை விடுமுறையையொட்டி, சென்னை கிண்டியில் உள்ள சிறுவர் பூங்கா நோக்கி படையெடுத்து வரும் மக்கள், அங்குள்ள பறவைகள் மற்றும் விலங்கினங்களை அதிகரிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
x
கோடை விடுமுறை தொடங்கியுள்ள நிலையில், செல்போன்களிலும், தொலைக்காட்சிகளிலும் குழந்தைகள் மூழ்கி கிடக்கின்றனர். அவர்களை திசை திருப்புவதற்காக, பெற்றோர், கடற்கரை, சுற்றுலா தளங்கள் உள்ளிட்ட இடங்களுக்கு அழைத்து செல்கின்றனர். ஆனால் வாட்டி வதைக்கும் வெயிலால் கடற்கரையை தவிர்த்து, சென்னை வாசிகள் அருகே உள்ள கிண்டி சிறுவர் பூங்காவிற்கு தங்கள் குழந்தைகளை ஆர்வத்துடன் அழைத்து செல்கின்றனர். அங்குள்ள பறவைகள் மற்றும் விலங்குகளை, அன்றாடம் குளியல், ஊட்டச்சத்துடைய உணவு வகைகள் என பூங்கா ஊழியர்கள் நன்றாக கவனித்து வருகின்றனர்.

ஆனால் வண்டலூர் உயிரியல் பூங்காவை ஒப்பிடும்போது கிண்டி பூங்காவில் பறவைகளும், உயிரினங்களும் குறைவாக உள்ளதால், மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். சென்னை மட்டுமல்லாமல், மற்ற பகுதிகளில் இருந்தும் பூங்காவிற்கு மக்கள் வருகை தருவதால், பூங்காவின் தரத்தையும், உயிரினங்களின் எண்ணிக்கையையும் உயர்த்திட வேண்டும் என்பதே மக்களின் பிரதான கோரிக்கையாக உள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்