காவல் ஆய்வாளர், பெண் காவலர் இடையே காரசார வாக்குவாதம்...

பெரம்பூர் ரயில்வே காவல் நிலைய காவலர்கள் அனைவரையும் ஒட்டுமொத்த பணியிட மாற்றம்.
x
சென்னை பெரம்பூர் ரயில்வே காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் காவல் ஆய்வாளரும், பெண் காவலரும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட காட்சி சமூக வலைதளத்தில் பரவியது. இது தொடர்பாக விசாரணை நடத்திய ரயில்வே எஸ்.பி. ரோகித் நாதன், சம்பந்தப்பட்ட காவல் ஆய்வாளரை காத்திருப்பு பட்டியலிலும், பெண் காவலரை அரக்கோணம்  காவல் நிலையத்திற்கும் பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டார். வாக்குவாதத்தில் இருவரும் ஈடுபடும் போது அதை வீடியோ எடுத்தும், வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தும் இருந்த பெரம்பூர் ரயில்வே காவல் நிலைய காவலர்கள் அனைவரையும் ஒட்டுமொத்த பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்