தந்தி டிவி செய்தி எதிரொலி...காய்கறி மூட்டைகளை ஏற்றிச்செல்லும் அரசு பேருந்து

சேலம் மாவட்டம் காடையாம்பட்டி சுற்று வட்டார பகுதி விவசாயிகள் தங்கள் தோட்டங்களில் விளையும் காய்கறிகளை அரசு பேருந்து மூலம் சேலம் உழவர் சந்தைக்கு கொண்டு சென்று விற்பனை செய்து வந்தனர்.
x
சேலம் மாவட்டம் காடையாம்பட்டி சுற்று வட்டார பகுதி விவசாயிகள் தங்கள் தோட்டங்களில் விளையும் காய்கறிகளை அரசு பேருந்து மூலம் சேலம் உழவர் சந்தைக்கு கொண்டு சென்று விற்பனை செய்து வந்தனர். கடந்த 10 நாட்களாக,  காய்கறிகளை பேருந்தில் ஏற்ற நடத்துநர் மறுத்ததால் விவசாயிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாயினர். இது குறித்து ஓமலூர் அரசு போக்குவரத்து கழக கிளை மேலாளரிடம் விவசாயிகள் சார்பில் மனு கொடுக்கப்பட்டது. 

இது தொடர்பான செய்தி கடந்த 7ஆம் தேதி தந்தி டிவியில் வெளியானது. இதன் எதிரொலியாக தற்போது உழவர் சந்தைக்கு செல்லும் பேருந்தில் தினமும் இரவு நேரத்திலும், அதிகாலை நேரத்திலும் காய்கறிகள் ஏற்றி செல்ல அனுமதிக்கப்படுகிறது. இதை தொடர்ந்து விவசாயிகள் தந்தி டிவிக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்