என் மகளை கொலை செய்தவருக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும் - மாணவி திலகவதியின் பெற்றோர் பேட்டி

கடலூர் மாவட்ட ஆட்சியருடன் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து திலவதியின் உடலை பெற்று கொள்ள பெற்றோர்கள் ஒப்புக்கொண்டனர்
x
விருத்தாச்சலம் அருகே கொலை செய்யப்பட்ட கல்லூரி மாணவி திலகவதியின் உடலை வாங்க மறுத்து மூன்றாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்ட பெற்றோர்,  உறவினர்கள்  மற்றும் பாமகவினர் கடலூர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர். கொலை வழக்கில் உரிய  நடவடிக்கை எடுக்கவும், தங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் மனுவில் தெரிவித்திருந்தனர். அவர்களுடன் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது, திலகவதியின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு மற்றும் அக்குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க  உறுதி அளித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து திலகவதியின் உடலை பெற்று கொள்ள உறவினர்கள் ஓப்புக் கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திலவதியின் பெற்றோர், தங்கள் மகளை கொன்ற இளைஞருக்கு கடும் தண்டனை அளிக்க வேண்டும் என்று கேட்டு கொண்டனர். போலீசார் மீதும் சரமாரியாக புகார் தெரிவித்தார்

Next Story

மேலும் செய்திகள்