குழந்தையை தத்தெடுக்க வழிமுறைகள் என்ன..?
இந்தியாவில் குழந்தைகளை தத்தெடுப்பதற்கான அரசின் வழிமுறைகள் எளிதாக இல்லை என்று கூறுபவர்கள், வெளிநாடுகளில் எளிமையாக உள்ளதாக கூறுகின்றனர்.
இந்தியாவில் குழந்தைகளை விற்கவோ, வாங்கவோ முயற்சிப்பவர்களுக்கு 3 முதல் 6 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், 1 லட்சம் ரூபாய் வரை அபராதமும் விதிக்க சட்டத்தில் வழிவகை உள்ளது. இதேபோல் குழந்தைகளை தத்தெடுக்கவும் அரசு கடுமையான வழிமுறைகளை வகுத்துள்ளது. அதன்படி குழந்தை வேண்டுவோர் இணையதளம் மூலம் மட்டுமே விண்ணப்பித்து பெற முடியும். குழந்தை வேண்டும் தம்பதியினரின் திருமணம் மற்றும் வயது சான்றிதழ்களை அவசியம் சமர்ப்பிக்க வேண்டும்.
45 வயதுக்கு மேற்பட்ட தம்பதிகள் குழந்தைகளை தத்தெடுக்க முடியாது. தங்களுக்கு குழந்தை பிறக்க வாய்ப்பில்லை என்ற மருத்துவ சான்றிதழை அளிக்க வேண்டும். குழந்தை தத்தெக்கும் தம்பதியருக்கு கண்டிப்பாக சொத்து இருக்க வேண்டும் வருமான சான்றிதழ் தேவையில்லை. 3 பேர் சிபாரிசு செய்ய வேண்டும். குழந்தையை தத்தெடுக்கும் தம்பதியருக்கு எதிர்பாரதவிதமாக எதுவும் ஆகிவிட்டால் அக்குழந்தையை வளர்க்க மற்றொரு தம்பதியர் உறுதி அளிக்க வேண்டும் என்றும் விதிமுறைகள் உள்ளன.
ஆனால் வெளிநாடுகளில் குழந்தைகளை தத்தெடுப்பதற்கான அரசின் வழிமுறைகள் எளிமையாக உள்ளதாக கூறப்படுகிறது. அமெரிக்காவில் அங்கீகரிக்கப்பட்ட மையங்களில் மட்டுமே குழந்தைகளை தத்தெடுக்க முடியும். அப்போது வழக்கறிஞர் உடனிருக்க வேண்டும். ஆஸ்திரேலியாவில் குழந்தையை தத்தெடுக்கும் தம்பதியருக்கு குற்ற பின்னணி உள்ளதா என்று ஆராயப்படுகிறது. குழந்தையை வளர்க்கவும் பயிற்சி அளிக்கப்படுகிறது. இங்கிலாந்தில் குழந்தையை தத்தெடுக்க தேசிய பதிவு ஆணையங்களில் மனு அளிக்க வேண்டும். அதை ஒரு குழு பரிசீலித்து சிபாரிசு செய்யும் தம்பதியரே குழந்தையை தத்தெடுக்க முடியும். சீனாவில் ஆரோக்கியமான தம்பதியர் அனாதை மற்றும் பெற்றோர்களால் வளர்க்க முடியாத குழந்தைகளை ததத்தெடுக்கலாம். ஒரு தம்பதியர் ஒரு குழந்தை மட்டுமே தத்தெடுக்க முடியும். இதேபோல் குழந்தையை தத்தெடுக்க, பல்வேறு நாடுகளில் எளிமையான வழிமுறைகளே உள்ளன.
Next Story