பழனி : ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம் - அதிகாரிகள் அதிரடி

பழனி பேருந்து நிலையம் அடிவாரம் பகுதியில் சாலையை ஆக்கிரமித்து நீட்டித்திருந்த கடைகள் ஜேசிபி இயந்திரம் மூலம் அகற்றப்பட்டன.
பழனி : ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம் - அதிகாரிகள் அதிரடி
x
நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பயன்படுத்தும் பழனி பேருந்து நிலையம் கடைகளின் ஆக்கிரமிப்பால் திணறியது. பக்தர்கள், பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளான நிலையில் நகராட்சி ஆணையர் நாராயணன் தலைமையிலான அதிகாரிகள் குழு வேகடைகளை அகற்றியது. இதேபோல் பலமுறை கடைகள் அகற்றப்படுவது திடீர் கடைகள் முளைப்பது ஆகியவை வாடிக்கையாக உள்ள நிலையில் கடைகளை நீட்டிக்க கூடாது என நகராட்சி நிர்வாகம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. எதுவரை கடையை நீட்டிக்கலாம் என்பது குறித்து மஞ்சள் நிற கோடு வரைந்தும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மீறினால் முன்னறிவிப்பின்றி கடைகள் அகற்றப்படும் என்றும் பறிமுதல் செய்யப்படும் பொருட்கள் திருப்பி தரப்படாது என்றும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்