குடிநீர் கேட்டு சாலை மறியல்
சென்னை பழைய வண்ணாரப்பேட்டை பார்த்தசாரதி பகுதியில் சுமார் 400 வீடுகள் உள்ளன.
சென்னை பழைய வண்ணாரப்பேட்டை பார்த்தசாரதி பகுதியில் சுமார் 400 வீடுகள் உள்ளன. இங்கு கடந்த மூன்று நாட்களாக லாரி மூலம் வினியோகிக்கபடும் குடிநீர் வழங்கப்படவில்லை என்று கூறி, அப்பகுதி மக்கள் காலிகுடங்களுடன் மறியலில் ஈடுப்பட்டனர். இதனால், திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் போக்குவரத்து சேவை பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து அங்கு சென்ற, கொருக்குப்பேட்டை போலீஸார் மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். குடிநீர் வாரிய அதிகாரிகளுடன் பேசி முறையாக லாரிகள் மூலம் தண்ணீர் தருவதற்கு உறுதியளித்தனர்.இதையடுத்து மக்கள், சாலை மறியலை கைவிட்டனர்.
Next Story