பஞ்சாப் நேஷனல் வங்கி ஊழியர் மர்ம மரணம்
புதுக்கோட்டை பஞ்சாப் நேஷனல் வங்கி அலுவலக உதவியாளர் மாரிமுத்து மர்மமான முறையில் உயிர் இழந்த விவகாரத்தில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.
புதுக்கோட்டை பஞ்சாப் நேஷனல் வங்கியில் அலுவலக உதவியாளராக பணியாற்றி வந்த மாரிமுத்து, கடந்த 4 நாட்களுக்கு முன்பு அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். மாரிமுத்து கொலை செய்யப்பட்டதாக பிரேத பரிசோதனையில் தெரிவிக்கப்பட்டி இருந்தது. இந்நிலையில், கடந்த 2013ஆம் ஆண்டு முதல் பொதுமக்கள் அடகு வைத்த நகைகளை மாரிமுத்து கையாடல் செய்திருப்பது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் அலுவலர் மாரிமுத்து கொலை செய்யப்படவில்லை என்றும் , பிரேத பரிசோதனை அறிக்கையில் தவறு இருப்பதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். பொதுமக்கள் அடகு வைத்த நகையை கையாடல் செய்து, கவரிங் நகையை வைத்து மாரிமுத்து ஏமாற்றியுள்ளதாகவும் போலீசார் கூறியுள்ளனர். மேலும், திருச்சி வங்கி கிளை அலுவலகத்தில் பணியாற்றும் ஒரு பெண் அலுவலருக்கும் , மாரிமுத்துக்கும் தொடர்பு இருந்துள்ளது. இதனால் அந்த பெண்ணை வர வழைத்து தற்போது போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story