சத்யபிரதா சாஹூ மீது உள்ள நம்பிக்கையை தி.மு.க.வும், எதிர்க்கட்சிகளும் முற்றிலுமாக இழந்து விட்டன - ஸ்டாலின்
தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு இயந்திரங்களை முழுமையான அளவிற்கு பாதுகாத்திட மாநில சிறப்பு தலைமை தேர்தல் அதிகாரி ஒருவரை நியமிக்க வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் கோரிக்கை.
கோவையிலிருந்து 50 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் தேனி தொகுதிக்கும், 20 ஒப்புகை சீட்டு இயந்திரங்கள் ஈரோடு தொகுதிக்கும் ஆள் நடமாட்டம் இல்லாத நேரத்தில் கொண்டு செல்லப்பட்டிருப்பதற்கு திமுக சார்பில் கண்டனம் தெரிவித்து கொள்வதாக ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.மறு வாக்குப் பதிவிற்காக அவை எடுத்து செல்லப்பட்டிருக்கலாம்" என்று கூறும் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி, "எத்தனை இடங்களில் மறு வாக்குப்பதிவு என்றால் அதைத் தேர்தல் ஆணையம் தீர்மானிக்கும் என்று நழுவுவதாக ஸ்டாலின் அதில் குறிப்பிட்டுள்ளார்.மறு வாக்குப் பதிவுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவே வராத நிலையில் ரகசியமாக வாக்குப் பதிவு இயந்திரங்களை தேனிக்கு கொண்டு சென்றது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ள ஸ்டாலின் , தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ மீது உள்ள நம்பிக்கையை திராவிட முன்னேற்றக் கழகமும், தமிழக எதிர்க்கட்சிகளும் முற்றிலுமாக இழந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு இயந்திரங்களையும், வாக்குப் பதிவு மையங்களையும் முழுமையான அளவிற்கு பாதுகாத்திட மாநில சிறப்பு தலைமை தேர்தல் அதிகாரி ஒருவரை நியமிக்க வேண்டும் என்று தலைமைத் தேர்தல் ஆணையருக்கு ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.
Next Story