13 வாக்குசாவடிகளில் மே19-ந்தேதி மறுவாக்குப்பதிவு - சத்ய பிரதா சாஹூ

தர்மபுரி, திருவள்ளூர், கடலூர், தேனி, ஈரோடு ஆகிய மாவட்டங்களின் 13 வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவு நடத்தப்பட உள்ளது.
x
தேர்தல் நாளின் போது, ஒரு சில மாவட்டங்களில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பற்றாக்குறை ஏற்பட்டதாகவும், மாதிரி வாக்குப்பதிவின் போது சில மையங்களில் அதிகாரிகள் தவறு செய்ததாகவும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ ஏற்கனவே தெரிவித்திருந்தார். இந்நிலையில், தர்மபுரி, திருவள்ளூர், கடலூர், தேனி, ஈரோடு ஆகிய மாவட்டங்களின் 13 வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவு நடத்தப்படும் என, அவர் கூறியுள்ளார். தர்மபுரியில் அதிகபட்சமாக 8 வாக்குச்சாவடிகளிலும், தேனியில் 2 சாவடிகளிலும், ஈரோடு, கடலூர், திருவள்ளூரில் தலா ஒரு வாக்குச்சாவடியிலும் மறு வாக்குப்பதிவு வருகிற 19 ஆம் தேதி நடைபெறும் என,  தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ குறிப்பிட்டுள்ளார்.

13 வாக்குசாவடிகளில் மே 19-ந்தேதி மறுவாக்குப்பதிவு - அமைச்சர் ஜெயக்குமார் கருத்து


தமிழகத்தில் 13 வாக்குசாவடிகளில் மே 19-ந்தேதி மறுவாக்குப்பதிவு - வழக்கறிஞர் பாலு கருத்து


13 வாக்குசாவடிகளில் மே 19-ந்தேதி மறுவாக்குப்பதிவு - ரவிக்குமார் (விசிக) கருத்து


13 வாக்குசாவடிகளில் மே 19-ந்தேதி மறுவாக்குப்பதிவு - தங்கதமிழ்ச்செல்வன் கருத்து


13 வாக்குசாவடிகளில் மே 19-ந்தேதி மறுவாக்குப்பதிவு - திமுக எம்பி ஆர்.எஸ்.பாரதி கருத்து




Next Story

மேலும் செய்திகள்