சென்னை : குடிநீர் கேன்களை ஆய்வு செய்த அதிகாரிகள் - சுகாதாரமற்ற குடிநீர் கேன்கள் பறிமுதல்

சென்னை மாநகரத்தில் விற்கப்படும் குடிநீர் கேன்களை ஆய்வு செய்த உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள், சுகாதாரமற்ற குடிநீர் கேன்களை பறிமுதல் செய்தனர்.
சென்னை : குடிநீர் கேன்களை ஆய்வு செய்த அதிகாரிகள் - சுகாதாரமற்ற குடிநீர் கேன்கள் பறிமுதல்
x
சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு தொடங்கிய நிலையில், குடிநீர் கேன்களின் விற்பனை அதிகரித்துள்ளது. இந்த சூழலை பயன்படுத்தி சுகாதாரமற்ற குடிநீர் கேன்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக புகார் எழுந்தது. அதன் அடிப்படையில் சென்னை கோயம்பேடு, வேளச்சேரி, கொளத்தூர் ஆகிய பகுதிகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். 3 இடங்களிலும் நடைபெற்ற சோதனையில் இருந்து, 35  வாகனங்களில் 3632 கேன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அதில் 649 குடிநீர் கேன்கள் சுகாதாரம் இல்லாமலும் தரம் இல்லாமலும் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்ட கேன்கள் தலைமை அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அழிக்கப்படும் என்றும் இந்த சோதனை தொடரும் என்றும் தெரிவித்தனர். 


Next Story

மேலும் செய்திகள்