45 ஆயிரம் வாக்காளர் பெயர் நீக்க விவகாரம் : தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவு

கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் 45 ஆயிரம் பேரின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது குறித்து தேர்தல் ஆணையம் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
x
கன்னியாகுமரி மாவட்டத்தில் கிறிஸ்தவர்கள் அதிகம் வாழும் கடலோர கிராமங்களில் 45 ஆயிரம் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும் இதுகுறித்து அறிக்கை தாக்கல் செய்ய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் எனவும் தமிழ் மீனவர் கூட்டமைப்பு  தரப்பில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டது. அதிகளவில் வாக்காளர்கள் நீக்கப்பட்ட பகுதிகளில் மறுதேர்தல் நடத்த உத்தரவிட வேண்டும் எனவும் கன்னியாகுமரி தொகுதி வாக்கு எண்ணிக்கைக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் அந்த மனுவில் கோரப்பட்டது. இந்த மனு நீதிபதி வைத்தியநாதன் மற்றும் சுப்பிரமணியம் பிரசாத் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுவுக்கு பதிலளிக்கும்படி தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை கோடை விடுமுறைக்கு பின் தள்ளிவைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்