வெயிலில் அவதியுறும் சுமை தூக்கும் தொழிலாளர்கள்

நாகப்பட்டினம் சரக்கு ரயில் நிலையத்தில் சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு ஓய்வெடுக்க இடம் இல்லை.
வெயிலில் அவதியுறும் சுமை தூக்கும் தொழிலாளர்கள்
x
இதனால் ரயில் நிலையத்தில் நிற்கும் சரக்கு ரயிலின் அடியில் தண்டவாளத்தில் நிழலுக்காக தொழிலாளர்கள் தஞ்சம் அடையும் அவலமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு குடிநீர், கழிவறை  உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ரயில்வே நிர்வாகம் செய்து தராததால் அவர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். கத்திரி வெயிலில் ஓய்வெடுக்க கூட இடமின்றியும், அடிப்படை வசதிகள் ஏதுமின்றியும் அவதியுறும் தங்களுக்கு, ரயில்வே நிர்வாகம் உடனடியாக அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்