11ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு
தமிழகத்தில் இன்று வெளியான 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவில், ஒட்டு மொத்தமாக 95 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
2018-19 ஆம் கல்வியாண்டுக்கான 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 6ஆம் தேதி தொடங்கி மார்ச் 22ஆம் தேதி நிறைவு பெற்றது. பள்ளி மாணவர்கள், தனித்தேர்வர்கள் உள்பட மொத்தம் 8 லட்சத்து 6 ஆயிரத்து 799 பேர் தேர்வு எழுதினர். இதற்கான தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. ஒட்டு மொத்த தேர்ச்சி விகிதம் 95 சதவீதமாகும். இது கடந்தாண்டைவிட ஒட்டு மொத்த தேர்ச்சி விகிதம் 4 விழுக்காடு அதிகரித்துள்ளது.
மாணவிகள் 96 புள்ளி ஐந்து சதவீதம், மாணவர்கள் 93 புள்ளி 3 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளனர். வழக்கம் போல் மாணவர்களைவிட மாணவிகள் மூன்று புள்ளி 2 சதவீதம் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாநில அளவில், 98 விழுக்காடு தேர்ச்சியுடன் ஈரோடு மாவட்டம் முதலிடத்தையும், 97 புள்ளி ஒன்பது விழுக்காடு தேர்ச்சியுடன், திருப்பூர் 2 வது இடத்தையும் பிடித்துள்ளன. கோவை மாவட்டம், 97 புள்ளி ஆறு விழுக்காடு தேர்ச்சியை பெற்று, 3வது இடத்தில் உள்ளது.
Next Story