மளிகை கடைக்கு வந்த சிறுமி பாலியல் பலாத்காரம்
வேலூரில், மளிகை கடைக்கு வந்த மன நலம் பாதிக்கப்பட்ட சிறுமியை, மகனுடன் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்த, 75 வயது முதியவர் கைது செய்யப்பட்டார்.
வேலூரில், மளிகை கடைக்கு வந்த மன நலம் பாதிக்கப்பட்ட சிறுமியை, மகனுடன் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்த, 75 வயது முதியவர் கைது செய்யப்பட்டார். புலிக்குட்டை கிராமத்தை சேர்ந்த 75 வயது முதியவர் வெங்கடாச்சலம், தமது மகன் கிருஷ்ணனுடன் சேர்ந்து மளிகை கடை நடத்தி வருகிறார். கடைக்கு பொருள் வாங்க வந்த மன நலம் பாதிக்கப்பட்ட13 வயது சிறுமியை வீட்டிற்கு அழைத்து சென்ற முதியவர் வெங்கடாச்சலம், பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரிகிறது. இதேபோல, வெங்கடாச்சலத்தின் மகன், கிருஷ்ணனும், சிறுமியை பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து, சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில், திருப்பத்தூர் மகளிர் போலீசார், தந்தை- மகன் இருவரையும் கைது செய்தனர்.
Next Story