மருத்துவர் என கூறி 15 பவுன் நகை கொள்ளை
காஞ்சிபுரம் மாவட்டம் பெரிய மார்கெட் அருகே நகை கடை நடத்தி வருபவர் மோகன்லால்
காஞ்சிபுரம் மாவட்டம் பெரிய மார்கெட் அருகே நகை கடை நடத்தி வருபவர் மோகன்லால். நகை கடைக்கு மர்ம நபர் ஒருவர் போன் செய்து தான் மருத்துவர் என்றும், பணியில் இருப்பதால் மருத்துவமனைக்கு நகைகளை எடுத்து வருமாறு கூறியுள்ளார். இதையடுத்து, நகைக்கடை உரிமையாளரின் மகன் தினேஷ், 15 சவரன் மதிப்பிலான 5 தங்க செயினுடன் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அப்போது மருத்துவமனை வாசலில் நின்ற நபர், நகையை பெற்று கொண்டு, மருத்துவரிடம் பணத்தை பெற்றுக் கொள்ளுமாறு கூறி சென்றுள்ளார். தினேஷ் மருத்துவரை அணுகியபோது, தான் போன் செய்யவில்லை என கூறியதை கேட்டு அதிர்ச்சிஅடைந்தார்.இது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Next Story