மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மாற்றமா..? - தேனி வட்டாட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு
தேனி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு ஐம்பதிற்கும் மேற்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தேனி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு ஐம்பதிற்கும் மேற்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையறிந்த திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு,அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. இவை அனைத்தும் கோவையில் இருந்து தேனிக்கு கொண்டு வரப்பட்டதாகவும், தலைமை தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படியே, வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். இந்நிலையில் அங்கு வந்த ஆட்சியருடன், எதிர்க்கட்சியினர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதால், அங்கு பரபரப்பான சூழல் நிலவுகிறது.
Next Story