"வேதாந்தா, ஓஎன்ஜிசி நிறுவனங்களை நுழையவிடமாட்டோம்" : கே.பாலகிருஷ்ணன் பேட்டி
நாகை மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு, வேதாந்தா மற்றும் ஓ.என்.ஜி.சி நிறுவனங்களுக்கு மத்திய சுற்றுச்சூழல் துறை அனுமதி அளித்துள்ளது.
நாகை மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு, வேதாந்தா மற்றும் ஓ.என்.ஜி.சி நிறுவனங்களுக்கு மத்திய சுற்றுச்சூழல் துறை அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில் இந்தத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, நாகையில் மார்க்சிஸ்ட் சார்பில் அக்கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கே.பாலகிருஷ்ணன், டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கக் கோரி வரும் ஜூன் 5ம் தேதி முதல் 10ம் தேதி வரை இருசக்கர வாகன பேரணி நடத்தப்படும் என்றார்.வேதாந்தா மற்றும் ஓ.என்.ஜி.சி நிறுவனங்களை ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த அனுமதிக்க மாட்டோம் எனவும், மீறி செயல்படுத்தப்பட்டால் தொடர் போராட்டங்கள் வெடிக்கும் எனவும் அவர் எச்சரித்தார்.
Next Story