துணை முதலமைச்சர் விசாரணை ஆணையத்தில் ஆஜராகாதது ஏன்? : முத்தரசன் கேள்வி
தேர்தல் முடிவுக்கு பின்னர் அதிமுக மற்றும் பாஜகவினர் தங்ககளுக்குள்ளேயே குறை கூறும் நிலை வரும் என இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார்.
தேர்தல் முடிவுக்கு பின்னர் அதிமுக மற்றும் பாஜகவினர் தங்ககளுக்குள்ளேயே குறை கூறும் நிலை வரும் என இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார். தூத்துக்குடியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் மத்திய அரசு பணிகளில் தமிழகம் புறக்கணிக்கப்படுவது குறித்து முதல்வர் பதில் அளிக்க வேண்டும் என கூறினார்.மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மரணத்தில் மர்மம் உள்ளது என கூறிய துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் இதுவரை விசாரணை ஆணையத்தில் ஆஜராகாதது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளார்.
Next Story