தாயின் இரண்டாவது கணவரால் மகளுக்கு பாலியல் தொல்லை : விசாரணையின் போது ஆய்வாளரும் தொல்லை கொடுத்தாக புகார்

திருவள்ளூர் மாவட்டம் சூரப்பட்டு பகுதியை சேர்ந்த ராதிகா தனது கணவரை விவாகரத்து செய்துவிட்டு தனது 17 வயது மகளுடன் வசித்து வருகிறார்.
தாயின் இரண்டாவது கணவரால் மகளுக்கு பாலியல் தொல்லை : விசாரணையின் போது ஆய்வாளரும் தொல்லை கொடுத்தாக புகார்
x
திருவள்ளூர் மாவட்டம் சூரப்பட்டு பகுதியை சேர்ந்த ராதிகா தனது கணவரை விவாகரத்து செய்துவிட்டு தனது 17 வயது மகளுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் ஜெயகரன் வாசுதேவன் என்பவரை ராதிகா இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் ஜெயகரன் தன்னிடம் தகாத முறையில் நடந்துக்கொள்வதாக ராதிகாவின் மகள் ராதிகாவிடம் கூறி அழுதுள்ளார். இதுதொடர்பாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்ததை அடுத்து, ராதிகா மகளை மட்டும் காவல் நிலையத்திற்கு வரவழைத்து விசாரணை என்ற பெயரில் அவருக்கு காவல் ஆய்வாளர் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் திருவள்ளூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்துக்கு மகளுடன் வந்த ராதிகா, தனது இரண்டாவது கணவர் ஜெயகரன் வாசுதேவன் மற்றும் தற்போது பழவந்தாங்கல் காவல் நிலைய ஆய்வாளர் நடராஜன் மீது போஸ்க்கோ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி புகார் அளித்தார்.

Next Story

மேலும் செய்திகள்