1 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்
ஆம்பூரில் தடையை மீறி விற்பனை செய்யப்பட்ட 1 டன் பிளாஸ்டிக் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
ஆம்பூரில் தடையை மீறி விற்பனை செய்யப்பட்ட 1 டன் பிளாஸ்டிக் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். வேலூர் மாவட்டம் ஆம்பூரில் பிளாஸ்டிக் பைகள் உள்ளிட்ட பொருட்கள் விற்கப்படுவதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதனை அடுத்து ஆம்பூர் நகராட்சி ஆணையர் சவுந்திரராஜன் தலைமையில் அதிகாரிகள் கடைகளில் சோதனை மேற்கொண்டனர்.சோதனையில் 1 டன் எடை கொண்ட தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் கப்புகள், தட்டுகள்,பாலீதின் கவர்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் தனியார் பேப்பர் மார்ட் உரிமையாளர் ஹரீஷ் என்பவருக்கு 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது
Next Story