ராஜேந்திர சோழன் வெட்டிய ஏரியில் மழை வேண்டி விவசாயிகள் வினோத வழிபாடு

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள சோழகங்கம் ஏரி ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, ராஜேந்திர சோழன் காலத்தில் வெட்டப்பட்டது.
ராஜேந்திர சோழன் வெட்டிய ஏரியில் மழை வேண்டி விவசாயிகள் வினோத வழிபாடு
x
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள சோழகங்கம் ஏரி ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, ராஜேந்திர சோழன் காலத்தில் வெட்டப்பட்டது. மழை வேண்டி விவசாயிகள் இந்த ஏரியின் மண்ணெடுத்து, பொம்மை செய்து விவசாய பொருட்களை வைத்து வழிபாடு நடத்தினர். இதனைத் தொடர்ந்து அந்த பொம்மையை துணியில் போட்டு இழுத்து சென்று  ஏரியில் தேங்கி கிடக்கும் தண்ணீரில் கரைத்தனர். பின்னர், இயற்கை அன்னையே மழை பெய்து விவசாயத்தையும், விவசாயிகளையும் காக்க மழை பெய்ய செய்ய வேண்டும் தாயே என வேண்டி, வினோத வழிபாடு  நடத்தினர். இயற்கையில் விளைவிக்கபட்ட காய் கனிகளை பயன்படுத்தி படையலிட்டு வழிபாடு நடத்தினர். விரைவில்  மழை பெய்யும் என வழிபாட்டில்  பங்கேற்ற விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் நம்பிக்கையுடன் கூறினர்.

Next Story

மேலும் செய்திகள்