வத்தலகுண்டு அருகே குட்கா, பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்
வத்தலகுண்டு பெரிய பள்ளிவாசல் அருகே சையது என்பவருக்கு சொந்தமான குடோனில் தடை செய்யப்பட்ட குட்கா பதுக்கி வைக்குப்பட்டு உள்ளதாக உணவு பாதுகாப்புத் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு பெரிய பள்ளிவாசல் அருகே சையது என்பவருக்கு சொந்தமான குடோனில் தடை செய்யப்பட்ட குட்கா பதுக்கி வைக்குப்பட்டு உள்ளதாக உணவு பாதுகாப்புத் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனை அடுத்து அங்கு சோதனை நடத்திய அதிகாரிகள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த, 25 கிலோ குட்கா மற்றும் 500 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தனர். சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் மதிப்பு ஒரு லட்சம் ரூபாய் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Next Story