சாலையோரம் நின்று கொண்டிருந்த ட்ரைலர் மீது கார் மோதியது : சுற்றுலா வந்த ஒரே குடும்பத்தின் 7 பேர் பலியான பரிதாபம்

வேலூர் மாவட்டம், ஆம்பூர் அருகே, நிகழ்ந்த சாலை விபத்தில் காரில் பெங்களூரூ நோக்கி சென்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் உடல் நசுங்கி பலியாயினர்.
சாலையோரம் நின்று கொண்டிருந்த ட்ரைலர் மீது கார் மோதியது : சுற்றுலா வந்த ஒரே குடும்பத்தின் 7 பேர் பலியான பரிதாபம்
x
மகாராட்டிரா மாநிலத்தை சேர்ந்த மெல்வின் தேஷ்முக் என்பவர், ரயில்வே தலைமை காவலராக பணியாற்றி வந்தார். இவர் தமது குடும்பத்தினருடன், வேலூர் தங்க கோவிலுக்கு சென்று விட்டு, பெங்களூரூ நோக்கி, தமது குடும்பத்தினருடன், காரில், சென்று கொண்டிருந்தார். ஆம்பூர் அருகே வெங்கிலி தேசிய நெடுஞ்சாலையில் வந்த போது, காரின் முன்பக்க டயர் வெடித்ததாக கூறப்படுகிறது. இதனால் நிலைகுலைந்த கார், சாலையோரம் நின்று கொண்டிருந்த ட்ரைலர் வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் மெல்வின் உள்ளிட்ட 3 ஆண்கள், 2 பெண்கள்,  மற்றும் 2 சிறுவர்கள் பலியாயினர். இச்சம்பவம் குறித்து தகவலறிந்த வட்டாட்சியர் சுஜாதா சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டார். மேலும் விபத்து குறித்து, வழக்கு பதிவு செய்த ஆம்பூர் போலீசார், உடல்களை கைப்பற்றி, அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்

Next Story

மேலும் செய்திகள்