7 பேர் விடுதலை : சென்னை உயர் நீதிமன்றத்தில் நளினி மனு
ராஜிவ் கொலை வழக்கில் தண்டனை பெற்றுள்ள 7 பேரை விடுவிக்குமாறு, தமிழக அமைச்சரவை கடந்த 2018 செப்டம்பர் 9ம் தேதி தீர்மானம் நிறைவேற்றி, ஆளுநருக்கு அனுப்பி வைத்தது.
ராஜிவ் கொலை வழக்கில் தண்டனை பெற்றுள்ள நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன், ஜெயகுமார், ராபர்ட் பயஸ் மற்றும் ரவிச்சந்திரன் ஆகிய 7 பேரை விடுவிக்குமாறு, தமிழக அமைச்சரவை கடந்த 2018 செப்டம்பர் 9ம் தேதி தீர்மானம் நிறைவேற்றி, ஆளுநருக்கு அனுப்பி வைத்தது. இந்த தீர்மானத்திற்கு ஒப்புதல் அளிக்குமாறு ஆளுநருக்கு உத்தரவிடக் கோரி நளினி சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஏழு மாதங்கள் கடந்தும் தீர்மானத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் இருப்பது அரசியல் சாசனத்திற்கு விரோதமானது என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. மேலும், தனக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை, ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்ட 2000ம் ஆண்டுக்குப் பின், 3 ஆயிரத்து 700 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மனு நாளை மறுநாள் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Next Story