"ஜெயலலிதா கைரேகை பற்றி எதுவும் குறிப்பிடவில்லை" - நீதிமன்ற தீர்ப்பு குறித்து முதலமைச்சர் பழனிசாமி விளக்கம்

திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தல் தொடர்பான தீர்ப்பில், ஜெயலலிதா கைரேகை பற்றி உயர் நீதிமன்றம் எதுவும் குறிப்பிடவில்லை என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா கைரேகை பற்றி எதுவும் குறிப்பிடவில்லை - நீதிமன்ற தீர்ப்பு குறித்து முதலமைச்சர் பழனிசாமி விளக்கம்
x
திருப்பரங்குன்றம் தொகுதி அதிமுக  வேட்பாளர் முனியாண்டியை ஆதரித்து, மதுரை ரிங்ரோடு அருகே உள்ள விரகனூரில் தொடங்கி பல இடங்களில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி,  அதிமுக அரசின் பல்வேறு  நலத்திட்டங்களை விரிவாக எடுத்துரைத்தார். அப்போது, திருப்பரங்குன்றம் தொகுதி திமுக வேட்பாளர் சரவணன் தொடர்ந்த இடைத்தேர்தல் தொடர்பான வழக்கில் தீர்ப்பளித்த உயர்நீதிமன்றம் ஜெயலலிதா கைரேகை பற்றி எதுவும் குறிப்பிடவில்லை என முதலமைச்சர் தெரிவித்தார். அது குறித்து ஸ்டாலின் பொய்யான தகவல்களை கூறி வருவதாகவும் முதலமைச்சர் பழனிசாமி குற்றம் சாட்டினார். 

Next Story

மேலும் செய்திகள்